ஆசிய நாட்டு மக்கள் மனங்கவர் தலைவர்களில் ஜனாதிபதிக்கு மூன்றாம் இடம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேலைத் திட்டங்களுக்கு இலங்கை மக்களில் 91 சதவீதமானோர் இணங்கியுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கணிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் மக்கள் கருத்து கணிப்பை பெறும் கோல் – அப் (Gol-up) நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

6 சதவீதமான மக்கள் ஜனாதிபதியின் செயற்றிட்டங்கள் குறித்து அதிருப்தி தெரித்துள்ளனர்.  3 சதவீதமான மக்கள் செயற்றிட்டங்கள் குறித்து எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

21 ஆசிய நாடுகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வில், மக்கள் ஆதரவு அதிகமுள்ள ஜனாதிபதிகளில், இலங்கை ஜனாதிபதி 3வது இடத்தை பெற்றுள்ளார்.

இந்த ஆய்வின்படி முதல் இடத்தை லாவோஸ் நாட்டின் தலைவர் ச்சொம்மாலி செயிக்நசன் பெற்றுள்ளதுடன், இரண்டாவது இடத்தை காம்போடியாவின் ஜனாதிபதி ஹன்சென் பெற்றுக்கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply