இந்திய கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த மேலும் ஐந்து இலங்கை மீனவர்களை அந்த நாட்டின் கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்திற்குரிய கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இலங்கை மீனவர்கள் பயணித்த படகு மற்றும் அதிலிருந்த மீன் ஆகியவற்றையும் இந்திய கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஆந்திர மாநிலத்திலுள்ள நீதிமன்றமொன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply