யாழில் வாக்காளர் எண்ணிக்கை குறைப்பு: பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் ?

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கான 2011 ஆம் ஆண்டுக்காண வாக்காளர்கள் பெயர்ப்பட்டியல் 2449 வாக்காளர்களால் குறைவடைந்துள்ளது.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கான 2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் இன்று உறுதி செய்யப்பட்டது.

எதிர்வரும் திங்கட்கிழமை வாக்காளர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படுமென யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆனையாளர் பி.குகநாதன் தெரிவித்தார்.

வாக்காளர் இடாப்பில் உள்ள பெயர் விபரங்களை கடந்த 15ஆம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை கிராம சேவையாளர் பிரிவுகளில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

2010 ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் அடிப்படையில் நான்கு இலட்சத்து 84,781ஆக இருந்தது.

இன்று உறுதி செய்யப்ட்ட 2011 ம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பின் அடிப்டையில் நான்கு இலட்சத்து 82,342 என கணிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்டையில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை குறையுமா என்பது தொடர்பில் உறுதி செய்ய முடியாத போதும் இலங்கையின் ஏனைய மாவட்டகளில் சனத்தொகை அதிகரித்திருப்பின் சில வேளையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறையுமென யாழப்பாண தேர்தல் தினைக்களம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply