இந்திய பொருளாதாரம் எந்த சவால்களையும் சமாளிக்கும் வல்லமை கொண்டது – கலாம் நம்பிக்கை

சர்வதேச பொருளாதார நெருக்கடி சூழ்நிலையிலும் இந்திய பொருளாதாரம் தனது வலிமையால் சவால்களை சமாளிக்கும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. எனினும், இந்தியா எந்த கடினமான சூழ்நிலையையும் சந்தித்து சமாளிக்கும் சக்தி கொண்டது. 

வாங்கும் சக்தி கொண்ட 40 கோடி உயர் நடுத்தர வருமான பிரிவினர், சவாலான பணிகளை செய்யக்கூடிய 60 கோடி இளைஞர்களே அதற்கு காரணம்.

எனவேஇ சர்வதேச நிதி நெருக்கடியால் இந்தியர்கள் அதிக கவலைப்பட தேவையில்லை. உழைக்கும் வயதுள்ள அனைவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினால் நமக்கு வெளியிடங்களில் இருந்து பாதிப்பு ஏற்படாது எனவும் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply