யாழில் திடிரென முளைக்கும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு அவதானமாக செயற்படுகிறோம்! பொலிஸ்
யாழ்.மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. திடிரென முளைக்கும் இந்தக் குற்றச் செயல்களைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பெரகார தெரிவித்தார்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட யாழ். ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழில் அதிகரிக்கும் குற்றச் செயலகளை பட்டியல் படுத்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் உண்மைக்குப் பிறம்பான செய்திகள் தொடர்பாக ஊடகங்கள் விளிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் பாரிய குற்றச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இவற்றைக் கண்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
மானிப்பாயைச் சேந்த சிறுவனைக் கடத்திய காத்தாங்குடி முஸ்லிம் வியாபாரிகளில் முக்கிய குற்றவாளி காத்தான்குடியில் தலைமறைவாகியுள்ளார்.
அவர் எமது பிரதேசத்திற்குள் இல்லாமையினால் உடனடியாக அவரைக் கைது செய்ய முடியவில்லை அவரைக் கைது செய்யதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்த விடையத்தில் நாங்கள் பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக சில ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இவற்றை நான் முற்றாக மறுக்கின்றேன். நாங்கள் சரியாகத்தான் நடந்து கொள்கின்றோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply