இலங்கைக்கு வாக்களித்த நாடுகள் ஐநா உறுப்புரிமை இழக்கின்றன
இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுலாக்க வேண்டும் என வலியுறத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை எதிர்த்து வாக்களித்த நான்கு நாடுகள் தமது உறுப்புரிமையை இழக்கவுள்ளன.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் வாக்களிக்கும் உரிமைகள் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் இலங்கைக்கு பாரிய ஆதரவினை வெளியிட்டு வரும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும், சவுதி அரேபியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளும் தமது வாக்களிக்கும் உரிமையை இழக்கவுள்ளன.
இந்த நாடுகளுக்கு பதிலாக வேறு நான்கு புதிய நாடுகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply