பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைப் பயணம் ஒத்திவைப்பு

பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹினா ரபானி கார்ஈ மேற்கொள்ளவிருந்த இலங்கை விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவார அமைச்சர் ஜீ எல் பீரிஸின் அழைப்பை ஏற்று எதிர்வரும் புதன் கிழமை அவர் இலங்கை வரவிருந்தார்.

அவரின் விஜயம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

முன்னர் அவரின் இலங்கை விஜயத்தின் போது லக்ஷ்மண் கதிர்காமர் நிறுவனத்தில் உரை ஒன்றை நிகழ்த்தவிருந்தார்.

வெளிவிவகார அமைச்சர் ஹினா ரபானி காவின் இலங்கை விஜயம் எப்போது இடம் பெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என லக்ஷ்மண் கதிர்காமர் நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply