யாழ் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது
வடமாகாண அரச வைத்தியர்களினால் நாளை முதல் ஆரம்பிக்கப்படவிருந்த பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருடனான பிரச்சினையின் காரணமாக நாளை முதல் பகிஸ்கரிப்பினை மேற்கொள்வதற்கு அரச வைத்தியர்கள் திட்டமிட்டிருந்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் நவீன் த சொய்சா தெரிவித்தார்.
எனினும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply