இந்தியா – பாகிஸ்தானுக்கிடையில் சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு!

காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இந்திய ரூ பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே வயல்வெளிகளில் மழை காரணமாக பள்ளங்கள் உருவானது.

ஒரே நேர்க்கோட்டில் இந்த பள்ளங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த விவசாயிகள், எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அந்த பகுதியை எல்லை பாதுகாப்பு படையினர் தோண்டினர். அப்போது 25 ஆழத்தில் சுரங்கப்பாதை இருப்பது தெரியவந்தது.

அது பாகிஸ்தானில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் எல்லை பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்திய பகுதியில் 400 மீட்டர் நீளத்துக்கு உள்ள சுரங் கப்பாதை, 3க்கு 3 அடி அளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆக்ஸிஜன் சப்ளை செய்ய 2 இஞ்ச் அளவுள்ள குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சுரங்கபாதை புதியதுபோல இருப்பதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

இந்த சுரங்கப் பாதையை தீவிரவாதிகள் பயன்படுத் தினார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டி உள்ளது. அதுகுறித்து விசாரணை நடக்கிறது என்று மாவட்ட எஸ்பி இஸ்ரார்கான் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply