மன்னார் ஆயருக்கு ஏற்பட்ட நிலை இலங்கையில் அனைத்து சர்வ மதத் தலைவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட அவமானம்
மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்க்க அனுமதி வழங்காமை இலங்கையில் அனைத்து கௌரவ சர்வ மதத் தலைவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட அவமானம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கொடிப்பிலிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 2012 ஜுலை 27ஆம் திகதி மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையுடன் வவுனியா சிறைச்சாலையில் இருந்து மஹர சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகளைப் பார்க்க சென்றிருந்தோம்.
இந்த கைதிகளைச் சந்தித்து அவர்களுக்காக ஜெபம் செய்யவும், அவர்களை ஆசிர்வதிக்கவும் மன்னார் ஆயர் என்னிடம் தெரிவித்திருந்தார். குறித்த கைதிகளிடையே கத்தோலிக்கர்களும் இருந்தனர் என தெரியவந்தது.
இவ்வாறு மஹர சிறைச்சாலைக்கு சென்றபோது அது குறித்து உங்களுக்கு அறியப்படுத்தினேன். உங்களது தனிப்பட்ட உதவியாளரான சுமுது பெரேரா நீங்கள் அதிக வேலைப்பளு என்றும், அதனால் தற்சமயம் உங்களால் உரையாட முடியாது எனவும் என்னிடம் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கைதிகளை பார்வையிட எனக்கு முடிந்த போதிலும் மன்னார் ஆயருக்கு பார்க்க அனுமதி வழங்கப்பட வில்லை என்றும் மஹர சிறை அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர்.
இது குறித்து பின்னர் நான் உங்களிடம் கேட்டபோது மன்னார் ஆயர் இந்த கைதிகளை பார்ப்பதற்காக எழுத்து மூலமாக கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தால் அனுமதி வழங்கியிருக்கலாம் எனறும் தெரிவித்தீர்கள்.
மன்னார் ஆயருக்கு இது குறித்து ஆலோசனை வழங்கவில்லை என்று நான் கூறினேன். மஹர சிறைச்சாலை அதிகாரிகள் தங்களுக்கு சிறைச்சாலைகள் தலைமையகத்திலிருந்து இந்த பணிப்புரை விடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
சிறைச்சாலைகளில் சாதாரண சலாசாரமாக மற்றும் சம்பிரதாயமானது எந்தவொரு கைதியையும் நாள் ஒன்றுக்கு மூவருக்கு அதிகமானோர் பார்க்க முடியாது. இதன்படியே மன்னார் ஆயரும், நானும் சென்றிருந்தோம்.
வவுனியா சிறையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மன்னார் ஆயரை சந்தித்து ஆசிர்வாதம் பெற ஆவலுடன் இருந்தனர்.
எனினும்; மன்னார் ஆயருக்கு இக் கைதிகளைப் பார்க்க அனுமதி வழங்கப்படாமையானது குறித்த கைதிகள் சாதாரண கைதிகளை விடவும் வேறு விதமாக நோக்கப்படுகின்றனர் என்பது புலப்படுகிறது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தொனிப்பொருளான சிறைக்கைதிகளும் மனிதர்கள் என்பதாகும். இலங்கை அரசியல் அமைப்பின்படி நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றவும், வழிபடவும் உரிமை உள்ளது. இதன்படி கைதிகளை மனிதர்களாக நோக்கும் மன்னார் ஆயருக்கு கைதிகளை பார்க்க கதவு மூடப்பட்டுள்ளது.
மன்னார் ஆயருக்கு கைதிகளை பார்க்க அனுமதி மறுப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களத்திலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையின் காரணம் மற்றும் அது குறித்து தெளிவுபடுத்துமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன். உங்களது நிலைப்பாடு அடங்கிய பதிலை விரைவில் எதிர்பார்கிறேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply