அரசாங்கத்தின் கடன்களை மக்கள் ஏன் செலுத்த வேண்டும் ?

அரசாங்கத்தின் கடன்களை மக்கள் ஏன் செலுத்த வேண்டுமென ஐக்கியதேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செய்து கொண்ட ஹெட்ஜின் ஒப்பந்தங்களைப் போன்று அரசாங்கம் உலகின் பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹெட்ஜின் உடன்படிக்கை தொடர்பான சர்ச்சைக்கு ஆரம்பத்திலேயே தீர்வுகண்டிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேன்முறையீட்டு வழக்கின் மூலம் பல மில்லியன் நட்டம்ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் மேன்முறையீடு செய்வதனால் அதிகளவு பணம் விரயமாகும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் பணத்தைக் கொண்டு இந்தக் கடன்களை செலுத்துவதனைத் தவிரஅரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தூர நோக்கமின்றி தீர்மானம் நிறைவேற்றி கடன் பெற்றுக்கொண்ட அதிகாரிகளே இவ்வாறான நட்டங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டுமென அத்தநாயக்ககுறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply