ஈராக் தலைநகரில் கார் குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் இரண்டு இடங்களில் நேற்று கார் குண்டுகள் வெடித்ததில் 19 பேர் உடல் சிதறி பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.
குற்றப்பிரிவு பொலிஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து அந்த பகுதி முழுவதும் தீப்பற்றியது. அதில் 17 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் 10 பேர் பொலிசார் என தெரிந்தது. பலூஜா என்ற இடத்தில் நடந்த 2வது கார் குண்டு வெடிப்பில் 2 பேர் உடல் சிதறி பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply