இந்திய வர்த்தக உயர்மட்டக் குழு இலங்கை வருகிறது

இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையில் உயரதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழில் துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

கொழும்பில் எதிர்வரும் 4ம் 5ம் திகதிகளில் இடம்பெறவுள்ள ‘இந்தியா ஷோ’ என்ற இந்திய நிறுவனங்களுக்கான சிறப்பு வர்த்தக கண்காட்சியில் பங்கேற்கவென இக்குழு இலங்கை வரவுள்ளது.

அதில் 100க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைக்க உள்ளன.

இந்தியா, இலங்கை இடையே வர்த்தகத்தை அதிகரிக்கவும், இலங்கையில் இந்திய பொருட்களின் விற்பனை உயரவும் இந்த கண்காட்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply