ஒசாமாவின் இழப்பிற்கு பின்னர் அல் கைய்தா பாரிய சரிவைச் சந்தித்துள்ளது

ஒசாமா பின்லாடனின் மரணத்திற்கு பின்னர் அல் கைய்தா இயக்கம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

2005 ஆம் ஆண்டிற்கு பின்னர் அல் கைய்தா இயக்கத்தின் தாக்குதல்கள் கடந்த ஆண்டு ஆக குறைந்த எண்ணிக்கையை பதிவுசெய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பயங்கரவாதம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லாடன் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பின்னர் பயங்கரவாத தடுப்பு தொடர்பான உலகளாவிய ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அல் கைய்தா இயக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் மாற்றமடைய கூடியதெனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply