ஈராக் தலைநகர் குண்டு வெடிப்பில் 21 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 21 பேர் பலியாயினர்.
அதிலும் குறிப்பாக ஷியா பிரிவு முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கர்ராடாக் மாவட்டத்தில், இரண்டு கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறின.
முதலாவது குண்டு வெடிப்பு, உணவு விடுதி முன்பு நிகழ்ந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அங்கிருந்த பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக மற்றொரு கார் குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்.
ஈராக்கில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலான தாக்குதல்கள் ஷியா முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply