பிரித்தானிய பிரதிநிதிகள் சந்திப்பில் அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம்
பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸூக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியல் விடயங்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர முதலீட்டு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் இடம்பெறவுள்ள பொது நலவாய நாடுகளின் அரச தலைவர்களது ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் இதன் போது விளக்கமளித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply