எகிப்தில் கிறிஸ்தவ ஆலயம் மீதான தாக்குதலில் 16 பேர் காயம்

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது 16 பேர் காயமடைந்துள்ளதாக எகிப்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முஹமட் மெர்சி ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெற்ற பாரிய வன்முறைச் சம்பவமாக இது அமையப்பெற்றுள்ளது.

இது குறித்த விசாரணைகளை எகிப்திய பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ஹொஷ்னி முபாரக் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் பதவி கவிழ்க்கப்பட்டதுடன் தற்போது ஆயுள் தண்டனைக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply