ஈரானியர்கள் 48 பேர் கடத்தலுக்கு சிரிய கிளர்ச்சிப்படை பொறுப்பேற்பு
நேற்று முன் தினம், சனிக்கிழமை 48 ஈரானியர்கள் சிரிய கிளர்ச்சிப் படையினரால் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை சிரிய கிளர்ச்சிப்படை பொறுப்பேற்றுள்ளது.
கடத்தப்பட்டவர்கள் ஈரானின் புரட்சிப்படையைச் சேர்ந்த காவலர்கள் எனவும் இவர்கள் முஸ்லிம் யாத்திரீகர்கள் அல்ல எனவும் ஈரானின் தேசிய ஊடகம் கூறியுள்ளது.
துபாயைத் தளமாகக் கொண்டு செயற்படும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இவர்களை கிளர்ச்சிப்படையினர் துப்பாக்கி முனையில் வைத்திருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது.
இதில் கடத்தப்பட்டவர்கள் கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் சிரியாவின் பழைய கொடி முன்பாக அமர்ந்திருப்பதும் தென்படுகின்றது.
சிரிய விவகாரம் குறித்து துருக்கியுடன் ஈரான் முரண்பட்ட கொள்கையைக் கொண்டுள்ள போதும் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க உதவும் படி ஈரான் துருக்கியையும், கட்டாரையும் கேட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply