இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்

கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை உடனடியாக விடுவிக்கக் கோரி, ஆகஸ்ட் 8ஆம் திகதி முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்துகொள்வார்கள் என இராமேஸ்வரம் பகுதி இயந்திரப் படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மேலும் பேசிய அவர், ´தமிழக மீனவர்கள் 5 பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு இலங்கையில் வாடுகின்றனர். அவர்களை விடுவிப்பதற்காக தமிழக அரசு ரூ.2 லட்சம் உதவித்தொகை அளித்த பின்பும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை’ என்றார்.

போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply