ரணில், திஸ்ஸவுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு
அனுராதபுரம் மாவட்டத்தின் ஆறு பிரதேசபை உறுப்பினர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதைத் தடுக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு சிவில் நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலன்பிந்துனுவெவ, ரம்பாவ, திரப்பனை, கெக்கிராவ, இபலோகம மற்றும் கஹடகஸ்திஹிலிய ஆகிய பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்ததாக மனுதாரர்களான பிரதேசசபை உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதன்படி அந்த பிரதேச சபை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply