லிபியாவில் சர்வதேச செஞ்சிலுவை குழு கட்டடத்தின் மீது தாக்குதல்
லிபியாவின் மிஸ்டாட்ரா நகரிலுள்ள சர்வதேச செஞ்சிலுவை குழுவின் கட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரனைட் மற்றும் எறிகணை போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பென்ஹாசி மற்றும் மிஸ்ராட்டா நகரங்களில் தமது பணிகளை நிறுத்தும் நோக்குடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைக் குழு கூறியுள்ளது.
இரண்டு நகரங்களிலும் கடந்த முன்று மாதங்களில் நடத்தப்பட்ட ஐந்தாவது தாக்குதலாக இது பதிவாகியுள்ளது.
எனினும் இந்த தாக்குதலில் தமது உத்தியோகத்தர்கள் எவரும் காயமடையவில்லை என சர்வதேச செஞ்சிலுவைக் குழு குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply