வேட்பாளர்களுக்கான நன்னடத்தை ஒழுக்கக் கோவை வெளியிட தீர்மானம்
வட மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்குத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நன்னடத்தை ஒழுக்கக் கோவை ஒன்றை இன்று வெளியிட தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்கள் கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை தொடர்பான ஒழுக்கக் கோவையே இன்று வெளியிடப்படவுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 20 மற்றும் ஒகஸ்ட் 3ம் திகதிகளில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சுயேற்சைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இதுகுறித்து விளக்கமளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply