அமெரிக்க வௌ்ளை மாளிகையில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவு
அமெரிக்காவின் குருத்வாராவில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் வெள்ளை மாளிகையில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பரக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
விஸ்கொன்சின் மாநிலத்திலுள்ள சீக்கிய கோவில் ஒன்றில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
அண்மையில் இடம்பெற்ற இவ்வாறான இரண்டு சம்பவங்களை அடுத்து வன்முறைகளை குறைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பரக் ஒபாமா கூறியுள்ளார்.
வேட் மைக்கல் பேச் என்ற 40 வயதுடைய அமெரிக்காவின் முன்னாள் இராணுவ வீரர் இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் நடத்திய தாக்குதலில் குறித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply