நியாயமற்ற கோரிக்கைகளுக்காக அரசாங்கம் தலையிட முடியாது
அரசியல் தேவைகளுக்கு ஏற்றவாறு மின்சக்தி துறையில் நெருக்கடியை தோற்றுவிப்பதை தவிர்க்குமாறு, மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சமூகத்தினதும், அரசாங்கத்தினதும் பொறுமைக்கு ஓர் வரையறை உள்ளதாகவும் இதன்போது அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றியபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை கூறினார்.
இதேவேளை மின்சார விநியோகத்தில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மின்சார சபையின் ஒரு தொகுதி ஊழியர்கள் 45 வீத சம்பள உயர்வு கோரியுள்ளமை நியாயமற்றது என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இத்தகைய நியாயமற்ற கோரிக்கைகளுக்காக அரசாங்கம் தலையிட முடியாதென பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் எதிர்பார்க்கப்பட்டவாறு பருவப்பெயர்ச்சி மழை கிடைக்காமையால் மின்சார விநியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார்.
அனல் மின்சார உற்பத்தி நிலையத்தைக்கூட உரிய காலத்திற்குள் சரியான இடத்தில் நிறுவ முடியாமல் போனமையும் பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதன்போது கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply