இலங்கைக்கு ஐநா அவசர நிதி உதவி

ஐக்கிய நாடுகள் சபையின் அவசர நிதியத்தின் கீழ் இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் கீழ் 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர உதவிகள் நிதியத்தின் இணைப்பாளர் வலாரி ஆமோஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை, சூடான், கொலம்பியா, கெமரூன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக அளவான மக்களுக்கு தேவை என்ற நிலையில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply