புதிய எரிபொருள் நா​ளைமுதல் சந்தைக்கு வருகிறது

எதிர்காலத்தில் அவசர விலைமனு கோரல் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பெற்றோலிய தொழிற்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

வருடாந்தம் நிலவும் தேவையின் அடிப்படையில் திட்டமிட்டு எரிபொருளை கொள்வனவு செய்யவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிடுகின்றார்.

குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் எரிபொருளை மொத்த அடிப்படையில் விலைமனு கோரல் மூலம் இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

குறைந்த விலையில் உடனடிக் கொள்வனவை மேற்கொள்வதற்கு இதன்மூலம் எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உலக நாடுகளில் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதால், தற்போது அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு புதிய எரிபொருள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக பெற்றோலிய தொழிற்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் சுத்திகரிக்கப்பட்ட புதிய எரிபொருள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply