மனித உரிமைகள் பேரவை நேர்மையாக செயற்பட வேண்டும்
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, நேர்மையாகவும், பக்கச்சார்பற்ற ரீதியிலும் மனித உரிமைகள் பேரவை செயற்பட வேண்டும் என இலங்கை கோரவுள்ளது.
அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் மனித சர்வதேச உரிமைகள் தொடர்பான பருவகால விமர்சன மாநாடு நடைபெறவுள்ளது.
இதன் போது இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் பக்கச்சார்பு இல்லாமல் இந்த அறிக்கை பரிசீலீக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply