லிபிய இராணுவ தளபதி சுட்டுக் கொலை
லிபியாவின் இராணுவ தளபதி ஒருவர் லிபியாவின் கிழக்கு நகரான பெங்காசியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெனரல் மொஹமட் ஹாடியா அல் பெய்டோரி என்ற அவர், தொழுகையை முடித்து வீடு செல்லும் வழியில், துப்பாக்கி தாரிகள் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் லிபிய அரசியல் தலைவர் மொவுமர் கடாபியின் கீழ் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் அண்மைக்காலங்களில் பெங்காசி நகரில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
கடந்த ஜுன் மாதம் லிபியாவில் இடம்பெற்ற தேர்தல்களையும், இந்த நகர மக்கள் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply