பாதிப்படையும் நிலையில் மின்னுற்பத்தி

நாட்டில் வறட்சியான காலநிலை தொடருமானால் மின்னுற்பத்தி பாதிக்கப்படும் என மின்சக்தி வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வறட்சியான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்தால் விக்டோரியா மற்றும் ரந்தெனிகல மின்னுற்பத்தி விநியோகம் முற்றாக  முடங்கக்கூடும்.

அனல் மின்சாரத் திட்டத்தை உரிய நேரத்தில் ஆரம்பிக்கத் தவறியமை மின்சார நெருக்கடிக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது என அவர்வ் சுட்டிக்காட்டியுள்ளார்.

1980களில்  தெற்கில் இத்தகைய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிக்கப்பட்டபோது பல்வேறு சக்திகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட விருந்தபோதிலும்  எதிர்ப்புகள் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.

அனல் மின்சார நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களே தற்போதைய மின்சார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அமைச்சர் சம்பிக்க இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நீர்சக்தி மூலம் 300 மெகாவாற் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. எனினும் இது போதுமானதல்ல. இரவு நேரங்களில் 2000 மெகாவாற் மின்சாரம் தேவைப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply