டெசோ தொடரும் சிக்கல்! இன்று மாநாடு ?
திமுக ஏற்பாட்டில் சென்னையில் இன்று (12.8.12) நடத்தவிருக்கும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோவின் மாநாடு பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்நோக்குகிறது.
எனினும் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என்று திமுகவின் தலைவர் கருணாநிதி சனிக்கிழமை இரவு தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று டெசோ மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்படவேண்டும் என்ற பொது நலவழக்கின் மீது உத்திரவு எதுவும் பிறப்பிக்காமல் சென்னை உயர்நீதிமன்றம், மாநாடு நடத்த அனுமதி கோரும் டெசோ மனுவின் மீது முடிவெடுக்கும் பொறுப்பினை மாநகர காவல்துறையிடமே விட்டுவிட்டது.
பின்னர் மாநாடு நடத்த அனுமதி இல்லை என்ற செய்தி டெசோ அமைப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து திமுக மீண்டும் உயர்நீதி மன்றத்தை அணுகியது.
சனிக்கிழமை மதியம் அந்த வழக்கு நீதிபதி பால் வசந்தகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையோ போக்குவரத்து நெரிசலோ ஏற்படும் வாய்ப்பில்லை என திமுக தரப்பில் வாதாடப்பட்டது.
ஆனால் தமிழ அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தீவிரவாதிகள் ஊடுருவி, அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்ததைப் போன்று பெரும் களேபரம் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் எனவே மாநாடு நடத்தப்படக்கூடாது எனவும் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வசந்தகுமார் ஏற்கனவே மாநாடு தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளே இவ்வழக்கையும் விசாரிக்கட்டும் என்று சொல்லி அமர்வை முடித்துக்கொண்டார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால் தலைமயிலான அமர்வின் முன் இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply