இஸட் புள்ளிக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு
கடந்த வருட உயர்தரப் பரீட்சை இஸட் வெட்டு புள்ளி காரணமாக அசௌகரியங்களை எதிர்நோக்கிய மாணவர்கள் தற்போது 3,550 முறைப்பாடுகளை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளனர்.
நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாக குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என மனிதவுரிமைகள் ஆணையாளர் பிரதிபா மகாநாமஹேவா தெரிவித்துள்ளார்.;
எனினும், எதிர்வரும் செவ்வாய்கிழமை கல்வித்துறை அதிகாரிகளை விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக மனிதவுரிமைகள் ஆணையகத்திற்க அழைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த வருடத்திற்கான இஸட் புள்ளிகள் காரணமாக தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக 380 மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மனுக்களை நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், பார்த்த மாத்திரத்தில் மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தெரியவருவதாக குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மாதம் 3 ம் திகதி மாணவர்களின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply