ஈரானில் மீட்பு பணிகள் தொடர்கின்றன

ஈரானின் வட மேல் பிராந்தியத்தில் இடம்பெற்ற நிலநடுக்கங்களை அடுத்து தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள சடலங்களை மீட்கும் பணிகளை மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

இடம்பெயர்ந்துள்ள ஆயிரக் கணக்கான மக்களுக்கான நிவாரணப் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

நிலநடுக்கங்களால் 250 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,800 க்கு அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

6. 3 மற்றும் 6. 4 றிக்டர் அளவில் இந்த நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இந்த அனர்த்தத்தினால் ஈரானின் வட மேல் பிராந்தியத்தில் உள்ள கிராமங்கள் கடும் பாதிப்புக்களை சந்தித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply