அமைச்சர் றிசாத்தை 27ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவு
வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீனை ௭திர்வரும் 27ஆம் திகதி மன்னார் நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்னார் மாவட்ட பதில் நீதிவான் ஆர்.௭ஸ்.ஏ. திசாநாயக்க நேற்று உத்தரவிட்டார். மன்னார் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சனை அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசியில் மிரட்டியது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மன்னார் நீதிமன்றில் நடைபெற்ற போதே பதில் நீதிவான் ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க மேற்படி உத்தரவை விடுத்தார்.
நீதிச்சேவை ஆணைக்குழு குறித்த வழக்கு விசாரணையை நடத்துவதற்காக நீதிபதி ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்காவை மன்னார் மாவட்ட பதில் நீதிவானாக விசேடமாக நியமித்த நிலையில் குறித்த வழக்கை பதில் நீதிவான் நேற்று விசாரணை செய்தார்.
மன்னார் மாவட்ட நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் கோந்தைப்பிட்டி இறங்குதுறை தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தன்னை தொலைபேசியில் மிரட்டியதாக குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் இலங்கை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மன்னார் நீதிவான் நீதிமன்றில் 408/12 எனும் இலக்கத்தில் குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
மேற்படி வழக்கு மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு நேற்று எடுக்கப்பட்டது. இச்சமயம் வழக்கு தொடுநர் சார்பில் குற்றப்புலனாய்வு பொலிஸ் பிரிவின் இன்ஸ்பெக்டர் றொசான் மஸ்இம்புல சாட்சியம் அளித்தார்.
அவர் தனது சாட்சியத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் நீதிவான் ஏ.யூட்சனுக்கு தொலைபேசியில் மிரட்டியது தொடர்பான முறைப்பாடு குறித்த புலன்விசாரணைகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாகவும், இது தொடர்பாக மன்னார் நீதிவான் ஏ.யூட்சனின் வாக்குமூலம் மற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வாக்குமூலம் மற்றும் அமைச்சரின் சகோதரரான பதியுதீன் முகம்மது றிப்கான் ஆகியோரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தொலைபேசி மூலம் தாம் மன்னார் நீதிவானோடு தொடர்பு கொள்ளவில்லை எனவும் தனது சகோதரரே தொடர்பு கொண்டதாக தெரிவித்ததையடுத்தே தாம் அமைச்சரின் சகோதரரின் வாக்குமூலத்தை பதிவு செயதுள்ளதாகவும் அமைச்சரின் சகோதரர் தான் மன்னார் நீதிவானோடு தொலைபேசியில் உரையாடிது உண்மை எனவும் எனினும் தான் கோந்தைப்பிட்டி இறங்குதுறை விடயம் தொடர்பாக எவ்வித மிரட்டலையும் நீதிவானுக்கு விடுக்கவில்லை எனத் தெரிவித்ததாகவும் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிவான் தொலைபேசியில் மிரட்டப்பட்டமை தொடர்பான அனைத்து புலன் விசாரணைகளும் பூர்த்தியடைந்துள்ளதையடுத்து தாம் இது
தொடர்பான சகல அறிக்கைகளையும் சட்ட மா அதிபதி திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டரின் சாட்சியத்தின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் நேற்று நீதிமன்றில் தனது சாட்சியத்தை அளித்தார்.
இதையடுத்து முறைப்பாடு தரப்பினரின் சாட்சியம், புலன் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டரின் சாட்சியம் தொலைபேசி சேவை வழங்குநர்களின் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை மன்னார் மேலதிக நீதிவான் ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க பரிசீலனைக்கு உட்படுத்தினார்.
இதையடுத்து இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டகோவையின் 186 மற்றும் 223 பிரிவுகளின் கீழ் அமைச்சர் றிசாட் பதியுதீன் தண்டனை பெறக்கூடிய குற்றத்தை புரிந்துள்ளதாக நீதிமன்றத்துக்கு இலகுவாக தென்படுகின்றது எனவும் மன்னார் நீதிவான் ஏ.யூட்சனை அமைச்சர் றிசாட் பதியுதீன் மிரட்டியது தொடர்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் குற்றவாளியே என்று நீதிமன்றம் உறுதிபட கருதுவதாகவும் மேலதிக நீதிவான் நேற்றைய வழக்கு விசாரணையின் பொழுது தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் றிசாட் பதியுதீøன இம்மாதம் 27ஆம் திகதி மன்னார் நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்னார் மேலதிக நீதிவான் ஆர்.எஸ்.ஏ.திசாநாயக்க “நேற்று உத்தரவிட்டார்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றுக்கு ஆஜராகுமாறு அழைப்பாøணயை பதிவு தபாலில் அனுப்புமாறும் மேலதிக நீதிவான் ஆர்.எஸ்.ஏ.திசாநாயக்க நேற்று உத்தரவிட்டார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply