அசாஞ்சுக்கு எக்வடார் அடைக்கலம் அளித்தது
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு தமது நாடு அடைக்கலம் வழங்கும் என்று எக்வடார் சற்று முன்னர் அறிவித்துள்ளது.இந்தத் தகவலை எக்வடாரின் வெளியுறவு அமைச்சர் ரிக்கார்டோ பட்டினோ தெரிவித்துள்ளார். ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அசாஞ்ச் அது தொடர்பான விசாரணைகளுக்காக அங்கு தேடப்படுகிறார்.
அங்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் கடந்த இரு மாதங்களாக லண்டனிலுள்ள எக்வடார் நாட்டு தூதரகத்தில் அசாஞ்ச் தங்கி வருகிறார்.
அசாஞ்ச் ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டால், அங்கிருந்து அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் அபாயம் இருக்கிறது என்று ரிக்கார்டோ பட்டினோ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply