நாளை புனித நோன்புப் பெருநாள்

ஹிஜ்ரி 1433ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசங்களில் தென்பட்டுள்ளமையினால் நாளை ஞாயிறுக்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாடலாம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று சனிக்கிழமை இரவு அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலிலுள்ள மத்ரஸதுல் ஹமீதியா மண்டபத்தில் இன்று மஃரிப் தொழுகையினை அடுத்து இடம்பெற்ற பிறை தீர்மானிக்கும் மாநாட்டிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, நாட்டின் பல பிரதேசங்களில் பிறை தென்பட்டதாக உறுதிப்படுத்தலுடன் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply