கேரளாவில் கைதான இலங்கையர்கள் விடுதலை!
அவுஸ்திரேலியா செல்ல தயாரான நிலையில், கேரளா – கொல்லம் பகுதியில் கைது செய்யப்பட்ட 12 இலங்கையர்கள், நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் வழக்கு நேற்று மினிமொல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்திய வெளியுறவுகள் துறை அமைச்சின் குறிப்பின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் பாதிக்கப்பட்டவர்களே தவிர, குற்றவாளிகள் இல்லை என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாக, சட்டத்தரணி ரமேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவர்கள் 12 பேரையும் நாடுகடத்தவிருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த தீர்மானத்தில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சின் அனுமதியுடன் அவர்கள் விரைவில் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply