பாடசாலைகளில் காவல்துறை குறிப்பு புத்தகம்
சிறுவர் துஸ்பிரயோகம் உள்ளிட்ட சிறார்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக பாடசாலைகளில் குறிப்பு புத்தகம் ஒன்றை பேணுமாறு காவல்துறை மாஅதிபர் என்.கே.இளங்ககோன் தெரிவித்துளார்.
பிரதிகாவல்துறை மாஅதிபர்களின் ஊடாக நாடளாவிய ரீதியாக உள்ள காவல்நிலையங்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையிலான உறவை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பலவித தரப்பினரினால் சிறார்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள், பாலியல் ரீதியான வன்புணர்வுகள் அதிகரித்துவதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களுக்கு முகம்கொடுக்கும் சிறார்கள் அது தொடர்பில் காவல்துறை புத்தகத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தற்போது பெரும்பாலான பாடசாலைகளில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஏனைய பாடசாலைகளுக்கும் இந்த பதிவு விடயம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply