ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி பூந்தமல்லி சிறப்பு முகாம் முற்றுகைப் போராட்டம்
ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி நாளை (21) செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 21) பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று (19) அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை அரசால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தமிழகத்திலும் நிம்மதியாக இல்லை. பொலிஸ் விசாரணை என்ற பெயரால் துன்புறுத்தப்படுவதும், விடுதலைப் புலிகள் மீதான தடையை நியாயப்படுத்துவதற்காக பொய் வழக்குகள் புனையப்பட்டு முகாம் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.
இதனைக் கண்டித்தும் சிறைகளில் உள்ள அனைவரையும் திறந்தவெளி முகாமில் வைக்க வலியுறுத்தியும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் செந்தூரன் 21 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
அரசு அனைவரையும் விடுவிப்பதாகக் கூறியதையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
ஆனால் அரசு உறுதியளித்ததற்கு மாறாக அவர்கள் அனைவரையும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து சென்னையை அடுத்த பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்தனர்.
இதனைக் கண்டித்து திங்கள்கிழமை (ஆகஸ்ட் 20) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் செந்தூரன் ஈடுபட உள்ளார். அவர் உயிருக்கு ஊறு நேர்ந்தால் தமிழக அரசுதான் பொறுப்பு.
ஈழத் தமிழர்களைச் சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து திறந்தவெளி முகாம்களில் வைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 21) பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply