சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 83 பேரை திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு படகுகளில் இவர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்துள்ளனர்.

கவன்டி என்ற படகில் 31 தமிழர்களும் 8 சிங்களவர்களுமாக 39 பேர் இருந்துள்ளனர்.

பிரசன்சானி என்ற படகில் 35 தமிழர்களும் 6 சிங்களவர்களும் 3 முஸ்லிம்களுமாக மொத்தம் 44 பேர் பயணிக்க தயாராகியுள்ளனர்.

இவர்களில் இரண்டு பெண்களும் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மூதூர், கொச்சிக்கடை, மட்டக்களப்பு, ஹபரணை, புளத்சிங்கள, பலாங்கொடை, கற்பிட்டி, மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply