தேர்தல் சட்டமீறல்கள் குறித்து 200 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்டமீறல்கள் குறித்து ஆராய்வதற்காக தேர்தல்கள் செயலகம் குழுவொன்றை நியமித்துள்ளது.

இம்முறை மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ளன.

இதில் அனேகமான முறைப்பாடுகள் அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.

இது குறித்து ஆராய்வதற்காக தேர்தல்கள் செயலகத்தின் 11 அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இன்று அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

தேர்தல் சட்டமீறல்கள் மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அந்த குழுவில் அங்கம் வகிக்கும் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply