அகாசி – ஜனாதிபதி சந்திப்பு இன்று

இலங்கை வந்துள்ள ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி இன்றைய தினம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நேற்றைய தினம் அவர் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அகாசிஇ தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை கொண்டு வர, சர்வதேச நாடுகள் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது யாழ்ப்பாண விஜயத்தின் போது, தமிழ் பிரதிநிதிகள் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சிகளை தாம் மேற்கொள்வதாக அகாசி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply