புகலிடக் கோரிக்கையாளர் குறித்த ஆஸி. அரசாங்கத்தின் கொள்கை பிழையானது

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் குறித்த அரசாங்கத்தின் கொள்கை பிழையானது என அவுஸ்திரேலிய க்ரீன் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் திட்டமானது மிகவும் மோசமானது என க்ரீன் கட்சியின் செனட்டர் லீ ரியன்னன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகளின் இந்தத் திட்டம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை உடனடியாக நாடு கடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன.

சிவில் யுத்தம் நிறைவடைந்து உள்ளதாகவும், புகலிடம் கோருவோரில் பலர் பொருளாதார நோக்கில் புகலிடம் கோருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன. இவ்வாறான கொள்கைகள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என ரியன்னன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply