இலங்கை ராணுவ வீரர்கள் 450க்கும் அதிகமானோர் இந்தியாவில் தொடர்ந்தும் பயிற்சி

இலங்கை ராணுவ வீரர்கள் 450-க்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு உட்பட நாட்டின் பல மாநிலங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு ஏ.கே.அந்தோனி புதன்கிழமை அளித்த பதில் வருமாறு:

இந்திய-இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சிப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதன்படி, இலங்கை ராணுவ வீரர்கள் 2 பேருக்கு தமிழகத்தின் வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவர்களைவிட 450-க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூர், கண்ணூர், பெல்காம் நகரங்களில் உள்ள ராணுவ மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply