இலங்கை ஜனாதிபதி திட்டமிட்டபடி இந்தியா வருவார் – பிரசாத் காரியவசம்

தமிழகத்தில் சிங்கள பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறான ஒரு நடவடிக்கை. ஆனால் இதற்காக இலங்கை ஜனாதிபதியின் மத்தியப் பிரதேசத்துக்கு வரும் பயணத் திட்டம் மாற்றப்படாது.

அவர் திட்டமிட்டபடி மத்திய பிரதேசத்துக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று இந்தியாவிக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் வற்புறுத்தல் காரணமாகத்தான் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. ஆனால் இதற்காக இந்தியா – இலங்கை இடையேயான உறவு பாதிக்காது என்று காரியவசம் கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் மிக மோசமாக நடத்தப்படுவது குறித்து கேட்டதற்கு, அது அனைத்தும் தவறான தகவல்கள். புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் ஏற்படுத்தும் புரளிகள் என்று பதில் அளித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply