ரொபட் ஓ பிளக் அடுத்த வாரம் இலங்கை வருவார்
அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய உதவி செயலாளர் ரொபட் ஓ பிளக் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார்.
எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை வரும் இவர், 14 ஆம் திகதி வரையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் ரொபட் ஓ பிளக், அரசாங்க அதிகாரிகள் பலரை சந்திக்கவுள்ளதுடன், எதிர் கட்சி உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார்.
இவரது இந்த விஜயமானது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை வருட இறுதியில் இலங்கை வருவதற்கு முன்னோடியாக அமைந்துள்ளது.
ரொபர் ஓ பிளக், முன்னாள் இலங்கை மற்றும் மாலைத்தீவு தூதுவராக பணியாற்றிய காலப்பகுதியில் 2011 ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply