விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் கடந்த மாதம் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவரை இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கடல்மார்க்கமாக இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற அவர் கடந்த மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவர் நேற்று ராமேஸ்வரம் மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில் நிறுத்தப்பட்ட போது, அவரை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
தமிழக விசாரணைப் பிரிவு காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply