ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு அமுல்படுத்துவதில் சந்தேகம்
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் அமுல்படுத்துமா என்பதில் சந்தேகம் நிலவி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போது கூட்டமைப்பு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்பனவற்றை அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்துமா என்பது சந்தேகமே என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
பாதுகாப்பு வலயங்கள், காணிப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் சமய தளங்கள் அபகரிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கு கிழக்கில் சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் என்பன தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply