இராணுவ மேஜர் மீதான தாக்குதல்: சம்பந்தப்பட்டவரின் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்க மறுப்பு
இலங்கை இராணுவப் புலனாய்வு மேஜர் அதிகாரி ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்த கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை பறிக்க முயன்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கின்ற மாலக்க சில்வா குழுவினர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையை உடனடியாக முடித்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மாலக்க சில்வாவுக்கு எதிரான முறைப்பாடு தவறானது என்றும் அதனால் வழக்கை தீர்த்துவிடுமாறும் குறித்த இராணுவ அதிகாரியே கேட்டுக்கொண்டபோதிலும் அதனை நீதவான் ஏற்கவில்லை.
அதேவேளை இராணுவ மேஜர் பொய் சொல்லியுள்ளாரா என்பதை ஆராய்ந்து, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, அதன்படி மேஜருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் கனிஷ்க விஜேரட்ண பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்துக்கு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முறைப்பாட்டாளரான இராணுவ அதிகாரி அளித்த வாக்குமூலத்தில், மாலக்க சில்வா குழுவினர் தன்னைத் தாக்கியதாக ஏற்கனவே தான் பொலிசில் முறைப்பாடு செய்தது தவறானது என்றும் தனக்கு ஏற்பட்ட திடீர் அதிர்ச்சி காரணமாகவே அப்படி ஒரு முறைப்பாட்டை செய்ததாகவும் கூறினார்.
15 ஆண்டுகாலம் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் திடீர் அதிர்ச்சியினால் இப்படி நடந்துகொள்வாரா என்று நீதவான் இடைமறித்து கேட்டபோது, தனக்கு ஏற்பட்ட அதிக இரத்த இழப்பு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியால் அப்படி முறையிட்டதாக தெரிவித்தார்.
தான் எந்தவிதமான அழுத்தங்களுமின்றி சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிப்பதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.
இந்த விடங்களை ஆராய்ந்த நீதவான், இந்த விவகாரத்தில் இராணுவ மேஜர் அளித்திருக்கின்ற வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு மட்டும் வழக்கை முடித்துக்கொள்ள முடியாது என்று அறிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்து கிடைக்கும் வீடியோ காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்டு வழக்கு விசாரணையை முன்னெடுத்துச்செல்ல முடியும் என்று நீதவான் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, மேலதிக விசாரணைகளை நடத்துமாறும் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மேர்வின் சில்வா அரச ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி எச்சரித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மேர்வின் சில்வா அரச ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி எச்சரித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அவ்வாறே மாலக்க சில்வா மற்றும் அவருடன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள ரெஹான் விஜேரட்ண ஆகிய சந்தேக நபர்களை தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவித்த நீதவான்இஇனிமேல் இப்படி எதுவும் நடக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தார்.
மாலக்க சில்வா வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகள் வருகின்ற திங்கட்கிழமை நடக்கவுள்ளன.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகின்ற அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா தலைமையிலான குழுவினர்இ கடந்த மாகாணசபைத் தேர்தல் நடந்த 8-ம் திகதி இரவு கொழும்பிலுள்ள பிரபல ஜய்க் ஹில்டன் தொடர்மாடி வளாகத்தில் வைத்து குறித்த இராணுவ அதிகாரியை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
தாக்கப்பட்ட இராணுவ மேஜர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பின்னர், இராணுவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றார்.
சம்பவம் நடந்து பல நாட்களாகியும் மாலக்க சில்வா குழுவினர் கைதுசெய்யப்படாமல் இருக்கின்றமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி கண்காணிப்பு கமராவின் வீடியோ பதிவுகள் கிடைத்திருப்பதாகவும் அதன்படி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே சம்பவம் நடந்து 9 நாட்களின் பின்னர், அதாவது கடந்த 17-ம் திகதி மாலக்க சில்வா குழுவினர் பொலிசில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply