சகல மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்!
சகல மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என கௌதம புத்தர் போதித்த போதனையை தற்சமயம் பின்பற்ற வேண்டியது அவசியம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சாஞ்சி நகரில் சர்வதேச பௌத்த பல்கலைக் கழகத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதன குறிப்பிட்டுள்ளார்.
பொறுமை மற்றும் புரிந்துணர்வை பின்பற்றி ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வின் விசேட விருந்தினராக பூட்டான் பிரதமர், சிக்மீ திண்லே கலந்து கொண்டார்.
இதன் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply