படகில் அவுஸ்திரேலியா சென்ற 18 பேர் இலங்கை திரும்புகின்றனர்
அகதிகள் தஞ்சம் கோரிய 18 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து புகலிடம் கோரி வருவோரை நௌரு தீவுகளுக்கு அனுப்பி வைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும் நௌரு தீவுக்குச் செல்ல விருப்பம் தெரிவிக்காத 18 இலங்கை அகதிகள் சுய விருப்பின் பேரில் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவுன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை 8.15 அளவில் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகள் கொழும்பு நோக்கி விமானம் மூலம் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply